26
சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியக் கதிர்கள் நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், மீண்டுமொரு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
ஆம்.! இந்த நூற்றாண்டிலேயே மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சந்திர கிரகணம் இந்தியாவில் வருகிற ஜூலை 27 ஆம் தேதி இரவு முதல் ஜூலை 28 ஆம் தேதி அதிகாலை வரை நிகழ உள்ளது என புவியியல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த சந்திர கிரகணம் நிகழ்வது குறித்து இந்திய புவியியல் அமைச்சகமும் உறுதிபடுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.