Home » ஓட்டு போட்ட மக்களுக்கு ஒட்டு போடும் அதிரை பேரூர் நிர்வாகம்!!

ஓட்டு போட்ட மக்களுக்கு ஒட்டு போடும் அதிரை பேரூர் நிர்வாகம்!!

0 comment

 

 

 

அதிரையில் தொன்று தொட்டு பல வருட காலமாக தார் சாலைகள் பெயர்ந்து வெறும் கற்கள் மட்டும் குண்டும் குழியுமாக இருப்பதை அனைவரும் அறிவர்.

உள்ளாட்சி தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தல்கள் வந்தால் மட்டுமே அதிரையில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணியையும், புதிய சிமெண்ட் அல்லது தார் சாலைகள் போடும் பணியையும் இரவு பகல் பாராமல் அதிகாரிகள் மக்கள் மத்தியில் செயல்படுத்துவது வாடிக்கையாகவே உள்ளது.

அப்படியிருக்கையில் கடந்த மாதத்தில் அதிரை போஸ்ட் ஆஃபீஸ் ரோடு 11 வது வார்டில் புதிய தார் சாலை பேரூர் நிர்வாகத்தால் போடப்பட்டது.

இந்தச் சாலை போடப்பட்டு ஓரிரு வாரங்களில், ஊரில் பெய்த சிறு மழையினால் சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு அதிரை பேரூர் நிர்வாகம் உடனடியாக புதிதாக போடப்பட்ட சாலை பெயர்ந்து பள்ளமாக காட்சியளித்ததை ஒட்டு போட்டு சரி செய்தனர்.

இதே போல மற்ற வார்டுகளிலும் குறிப்பாக 13 வது வார்டில் தார் சாலைகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இச்சாலையாவது ஓட்டு போட்ட மக்களுக்கு பிரயோஜனமாக இருக்குமா அல்லது அதிகாரிகள் இதற்கும் ஒட்டு போடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஓட்டு போட்ட மக்களுக்கு சாலைகளில் ஒட்டு போடாமல் தரமான தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று அதிரை மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இக் கோரிக்கையை அதிரை பேரூர் நிர்வாகம் செவியேற்குமா அல்லது பேந்த பேந்த முழிக்குமா என்பது விரைவில் தெரியும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter