கருணைக்கொண்டவனே..
மேகம் தந்தவனே..
ஈடில்லா நாயனே..
இணையில்லா இறையோனே..
அறிவை தந்தோனே, ஆழ்கடல் படைத்தோனே..
மின்னலை மிளிரச்செய்தோனே..
மாண்பு கொண்ட மறையோனே..
தாகம் தீர்க்கும் நல்லோனே,
வையகம் போற்றும் வல்லோனே..
மானிடம் வளர்த்தோனே, வாழ்க்கையை தருபவனே..
தாய் கொண்ட பாசத்தையும் வெல்பவனே..
தாய் பூமியை குளிரச்செய்தவனே..
இரக்கமற்ற கூட்டத்தில் இறங்கி வந்து உதவி புரிபோனே..
காய்ந்த பூமிக்கு அன்பு கொண்டோனே..
எங்கள் தேவையை அறிந்தோனே..
எங்கள் நிலை அறிந்தோனே. மழை தந்தவனே..
வான் புகழ் போற்றும் மிக்க புகழுடையோனே..
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் அதிரையர் உன்னை..








