Monday, March 23, 2026

இந்தியன் ரெட்கிராஸின் அயராத முயற்சியால் சாக்கடைக்கு மூடு விழா!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் சாக்கடை மேல் டீக்கடை என்ற தலைப்பில் மெயின் ரோடு ஹபீபா ஹைப்பர் மால் எதிரே திறந்தவெளி சாக்கடை கால்வாயை மூட வேண்டும் என கோரிக்கையை வெளியிட்டு இருந்தோம்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அதிரை நகர சேர்மன் மறைக்கா இதீரீஸ் அகமது அவர்கள் தாசில்தார், உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர் கோரிக்கையை மேற்கொண்டார்.

இதன் பலனாக அக்கால்வாயை மூடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தற்போது அந்த கால்வாய் சிமிண்டால் ஆன ஸ்லாப்கள் கொண்டு மூடபட்டன.

இதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லை குறைவதுடன் துர்நாற்றம் இன்றி காணப்படுகிறது.

இதற்க்கு அயராது பாடுபட்ட IRCS சேர்மன், நடவடிக்கையில் ஈடுபட்ட மாவட்ட, பேரூர் நிர்வாகிகள், ஊழியர்கள் அனைவருக்கும் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img