Wednesday, February 4, 2026

மல்லிப்பட்டினம் கிராம சபை கூட்டத்தில் சமுதாய நலமன்றத்தினர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற தலைவர் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளிப்பு.

ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் சுதந்திர தினம் அன்று நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.மேலும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்கள் வலிமை வாய்ந்தவையாகும்.அதனடிப்படையில் இன்று மல்லிப்பட்டினம் மனோராவில் தனி அலுவலர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மல்லிப்பட்டினம் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள சாலையில் குண்டும்,குழியுமாக இருப்பதால் சாலை சீரமைக்க வேண்டும்,குடிநீர் பிரச்சனை குறித்து அனைத்து தெருக்களிலும் குடிநீர் வினியோகம் சரியாக வருகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதையும், புதுக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் குப்பைகள் தேங்கி இருக்கின்றன மழைக்காலம் வர இருப்பதால் உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும் என்பன உள்ளடக்கிய கோரிக்கை மனுவை மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத் தலைவர் அப்துல் ஹலீம் மற்றும் ஹசன் முகைதீன் இருவரும் அளித்தனர்.

மேற்படி உள்ள கோரிக்கை கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img