Sunday, March 22, 2026

கொசுக்கடி.. மறுக்கடி.. செரவடி.. : நடவடிக்கை எடுக்குமா அதிரை பேரூராட்சி??

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை சுற்றுவட்டார பகுதியில் கொசுக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தற்பொழுது மழைக்காலம் துவங்கிய நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது.

அதே போல தமிழகத்திலும் பல மாவட்டங்களிலும் மிதமான கண மழை பெய்து வருகிறது.

நமதூர் அதிரையிலும் நாளுக்கு நாள் அவ்வப்போது மழை பெய்கிறது.

இதனால் மழை நீர் ஆங்காங்கே இருக்கும் சில குண்டும் குழியுமான சாலைகளில் தேங்கி நிற்கிறது.

இந்த நீர் தேக்கத்தினால் கொசுக்கள் முட்டையிட்டு உற்பத்தியாகி கொசு இனம் பெருகுவது மட்டுமல்லாமல் மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்ற பல விதமான நோய்களையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெருக்கி விடுகிறது.

கடந்த வருடம் தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்தது. அதற்கு அதிரையும் விதிவிலக்கல்ல எனலாம்.

வெள்ளம் வரும் முன் அனை கட்ட வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப அதிரை பேரூராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரையில் உள்ள அனைத்து தெருக்களிலும், கழிவு கால்வாய்களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று அதிரையர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை அதிரை பேரூராட்சி நிர்வாகம் ஏற்குமா அல்லது ஏளனம் செய்யுமா என்பதை காலம் தான் கட்டாயம் முடிவு செய்யும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img