47
வளைகுடா நாடுகள் மற்றும் சில வெளிநாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி இன்று அதிரையை அடுத்த மல்லிப்பட்டினத்தில் சர்வதேச பிறையின் அடிப்படையில் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மல்லிப்பட்டினம் ஜாக் பள்ளித்திடலில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் பலர் கலந்துகொண்டனர்.