Home » கேரளாவிற்கு ஐக்கிய அமீரக அரசு ₹700 கோடி நிதி உதவி!!

கேரளாவிற்கு ஐக்கிய அமீரக அரசு ₹700 கோடி நிதி உதவி!!

0 comment

கேரளாவில் பெய்து வடமேற்கு பருவமழை மிகத் தீவிரமடைந்து கண மழை கொட்டி தீர்த்தது. இதனால் கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது.

இடுக்கி போன்ற இடங்களில் நிலச்சரிவுகளும் உயிர் பலிகளும் ஏற்பட்டது.

இன்று அம் மாநில முதல்வர் நிவாரணம், நிதி உதவி பற்றி திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட சபாநாயகருக்கு வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் 30ம் தேதி சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் கேரளாவில் மீட்புப் பணிகள், நிவாரணம், மறுசீரமைப்பு குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட இந்திய பிரதமர் மோடி ரூ.500 கோடியை கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத்திற்காக அறிவித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கண்டு வளைகுடா நாடுகளில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வெள்ளம் வந்தது போல உணர்கிறார்கள். அபுதாபி அரசர் தினசரி தொடர்பு கொண்டு வெள்ள நிலைமைகளைக் கேட்டறிகிறார். வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரூ.700 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளது.

உலகம் முழுவதும் வாழும் தமிழ மற்றும் மலையாள மக்கள் தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர் என்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன் கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter