78
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகரம் சார்பாக SDPI கட்சியின் கலந்தாலோசனை கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள்,செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வருகின்ற செப்டம்பர் 10ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானம் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் SDPI கட்சி நகரத் தலைவர் அப்துல் பஹத் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் ரஹீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மரக்காவலசை உள்ளிட்ட ஊர்களின் கட்சி நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.