Home » அதிரை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் முக்கிய அறிவிப்பு !

அதிரை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் முக்கிய அறிவிப்பு !

0 comment

தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினத்தில் வறண்டு கிடக்கும் நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களை ஆற்றுநீரை திறந்துவிடகோரி நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் கடந்த ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 13 ஆகிய தேதிகளில் 40க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால் இன்னமும் அதிரைக்கு ஆற்றுநீர் வந்தபாடில்லை. எனவே நாளை மறுநாள் திங்கட்கிழமை(10/09/2018) அதிரையிலிருந்து 30க்கும் மேற்பட்ட வேன்களில் பொதுமக்களை திரட்டி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மூன்றாவது முறையாக வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் நாளை மறுநாள் திங்கட்கிழமை(10/09/2018) பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய பந்த்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் திமுக , மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனவே நாளை மறுநாள்(10/09/2018) நடைபெற இருந்த மாவட்ட ஆட்சியர் சந்திப்பு , அதற்கு பதிலாக வருகிற 17/09/2018 திங்கட்கிழமை நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

வாகனங்கள் புறப்படும் இடம் : அதிரை பேருந்து நிலையான(மெயின்ரோடு)

நாள் : 17/09/2018 திங்கட்கிழமை

நேரம் : சரியாக காலை 7 மணி

தொடர்புக்கு : 9566008588 / 9442038961 / 9942436036

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter