131
மரண அறிவிப்பு : கீழத்தெரு புதுக்குடி நெசவுக்காரத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மொங்கான் மாமா என்கிற ஓடாவி நெய்னா மூஸா அவர்களின் பேரனும் , பெரிய கடைத்தெரு தீன் ஹோட்டல் மெய்னச்சா என்கிற முஹம்மது சேக்காதீ அவர்களின் மகனும் , முஹம்மது யூசுப் அவர்களின் மருமகனும் , அப்துல் முனாஃப் , உமர் கத்தாப் , இபுராஹிம்சா , ஜாபர் , ஷேக் , தவ்பீக் ஆகியோரின் சகோதரரும் , முஹம்மது அனஸ் , மெக்கானிக் முஹம்மது அவர்களின் மைத்துனருமாகிய ஜாஹிர் உசேன் அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.