தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினதிற்கு மேன்மேலும் பெருமை சேர்க்கும் அதிரை சேதுரோட்டை சேர்ந்த வாலிபர் காலித் அகமது அவர்கள் பற்றி இன்றைய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற தின நாளிதழில் முதல் பக்கத்தில்வந்துள்ளது.
அச்செய்தித்தாளில் இவர் பற்றி வந்த செய்தி :-
23 வயது உள்ள வாலிபர் காலித் அகமது அவர்கள் தங்கள் நண்பர்களுடன் ஒரு அவசர வேலையாக வெளியே சென்றுள்ளார்.அங்கு இவர் சாலை ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் ஒரு முதியவர் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். யாருமே அவரை ஒரு மனிதனாக மதிக்காமல் சென்றனர்.ஆனால் வாலிபர் காலித் அகமது அவர்கள் அந்த முதியவருக்கு தண்ணீர் அருந்த கொடுத்தார்.அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த முதியவர் அங்கு மரணமடைத்துவிட்டார்.இதையடுத்து அந்த முதியவரை அரசு மருத்துவமனை பிணங்கள் வைக்கும் அறையில் வைத்து அவர் பற்றி விசாரிக்க துடங்கினர்.
ஆனால் அவருக்கு எந்த உறவுகளும் இல்லை என்று தெரியவந்தது.
அப்பொழுது வாலிபர் காலித் அகமதுக்கு ஒரு யோசனை தோன்றியது.
தமிழகத்தில் பல இடங்களில் பலர் உறவுகள் இல்லாமல் மரணம் அடைந்தாள் அவர்களின் நிலை என்ன ஆவது என்று எண்ணினார்.
இதனை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சொந்தம் என்று சொல்ல உறவு இல்லாதவர்கள் இறந்தால் அவர்களை குடும்பத்தார் போல அடக்கம் செய்ய வாலிபர் காலித் அகமது அவர்கள் “உறவுகள்” என்ற பெயரில் ஒரு தன்னார்வல தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் பல சொந்தங்கள்(அனாதை) இல்லாத உடல்களை 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் பல திருநங்கைகள் மூலம் அடக்கம் செய்து வருகிறார் என்று அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரின் இந்த சமூக சேவையை பாராட்டும் விதத்தில் இதுவரை பல தின நாளிதழ்களில் இவர் பற்றி வெளிடப்பட்டுள்ளன.
இவர் அதிரைக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் நிலையில் இவருக்கு அதிரையை சேர்ந்த பலரின் பாராட்டுகள் குவிகின்றன.
இவர் பற்றி இன்று வெளியிட்ட செய்திகளை நேரடியாக பார்க்க கீழே உள்ள லிங்கை மூலம் செல்லுங்கள்..
http://epaper.newindianexpress.com/c/22318225