167
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் பதவி ஏற்றனர். இந்நிலையில் துரைமுருகன் வகித்து வந்த முதன்மை செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலுவை முதன்மை செயலாளராக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.