2013-ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் அதன் நெகிழ்வான டிஸ்பிளே கான்செப்ட்டை வெளிப்படுத்தும் முன்புவரை மடங்கக்கூடிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்கள் சாத்தியமில்லை என்ற கருத்தே நிலவி வந்தது. “முடியாது” என்ற எல்லைகளை தாண்டும் நோக்கம் கொண்டதாய் சாம்சங் நிறுவனம் செயல்பாடுகள் இருந்தாலும் கூட மடங்கும் ஸ்மார்ட்போன்களை பொறுத்தமட்டில் அதன் மீதான எதிர்பார்ப்புகள் கிட்டத்தட்ட இறந்துவிட்டன என்றே கூறவேண்டும்.
இந்நிலைப்பாட்டில் சமீபத்தில் வெளியான தகவலொன்று, சாம்சங்க நிறுவனத்தின் போல்டபில் ஸ்மார்ட்போன்கள் விரைவில் உயிர்பெற இருப்பதாய் அறிவிக்கின்றன. அதென்ன அறிக்கை.? போல்டபில் ஸ்மார்ட்போன்கள் என்பது சாத்தியமானது தானா.? அது உருவாக்கம் பெறுகிறது என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா.?