Thursday, February 5, 2026

புத்தம் புது காலையில், ஈசிஆர் சாலை நாயகன் உடற்பயிற்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

இன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், நம் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. இதனால் உடல் சார்ந்த பிரச்சனைகள் நிறையவே ஏற்படுகின்றன.

அதிகாலையில் நாம் செய்யும் உடற்பயிற்சி உடலுக்கு தரும் ஓர் உன்னத புத்துணர்ச்சி என்பதை மறந்து தேவையற்ற செயல்களில் அதிகாலை பொழுதினை கழித்து வருகிறோம்.

ஆனால் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ஃபஹத் எனும் இளைஞர் இரண்டு வருடங்களுக்கு மேலாக கிழக்கு சாலையில் (ECR) ராஜாமடத்திலிருந்து அதிரை ரயில்வே கேட் வரையிலும் தினமும் புத்தம் புதிய அதிகாலையில் ஜாக்கிங் உடற்பயிற்சியை மேற்க்கொண்டு வருகிறார்.

இந்த ஈசிஆர் நாயகனின் ஜாக்கிங் ஓட்டம் அதிரையர்களை வெகுவாக கவர்ந்துள்ளது மட்டுமின்றி கான்போர்களையும் ஜாக்கிங் உடற்பயிற்சி செய்ய தூண்டியுள்ளது.

இதனால் அதிரையர்கள் தற்போது அதிகமானோர் ஜாக்கிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தன்னுடைய உடற்பயிற்சி மூலம் மற்றவர்களையும் உடற்பயிற்சி செய்ய வைக்கும் இவரின் முயற்சியை அதிரையர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஈசிஆர் நாயகன் அப்துல் ஃபஹத் அதிரை திலகர் தெரு மாஜிதா ஜீவல்லரிக்கு எதிரில் கிரீன் மொபைல் என்கிற கடை வைத்து நடத்தி வருகிறார்.

மல்லிப்பட்டனத்திலிருந்து மீன் பிடித்து அதிரை நோக்கி வருவது போல, ரஜாமடத்திலிருந்து அதிரையை நோக்கி புத்தம் புது காலையில் புயலாய் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி மேற் கொண்டிருக்கும் ஈசிஆர் நாயகன் அப்துல் ஃபஹத்தை நாமும் வாழ்த்துவோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img