Home » அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 59வது மாதாந்திர கூட்டம்…!

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 59வது மாதாந்திர கூட்டம்…!

by admin
0 comment

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 59 வது மாதாந்திர கூட்டம் செப் 14 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

கிராஅத் ஓதி அப்துல் ஹமீது இக்பால் துவக்கி வைத்தார்.ரியாத் கிளை தலைவர் S.சரபுதீன் முன்னிலை வகித்தார்
துணை தலைவர் அகமது அஸ்ரப் வரவேற்புரையாற்றினார்.
பொருளாளர் N. அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.

இணைச் செயலாளர் M. அப்துல் மாலிக் அறிக்கை வாசித்தார் .

நன்றியுரை A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

கீழ்க்காணும் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

1. இந்த வருடம் ஹஜ் பெருநாளின் குர்பானி (உளுஹிய்யா ) திட்டத்தை மிகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் நடத்தி ( ஏழை எளிய மக்களுக்கு ) உதவி வந்த அதிரை ABM H/O தலைமையகத்தை பாராட்டி ABM RIYADH கிளையின் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு இன்ஷா அல்லாஹ் வரும் வருடம் ஊர் மக்கள் மேலும் ஆதரவு தந்து மேலும் செம்மையாக நடத்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

2. வரும் ஆண்டுக்கான பென்ஷன் மற்றும் சந்தாவை தவறாது செலுத்தி நமதூர் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்கு உதவிடுமாறும், மாத சந்தாவை தவறாது கொடுத்து உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது.

3. இன்ஷா அல்லாஹ் வரும் கூட்டத்தில் 2019 ஆண்டிற்கான பென்ஷன் 20 பேர் கொண்ட நபர்களை சேகரிப்பது விஷயமாக ஆலோசிக்கப்பட்டது.

4. உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் நன்கொடைகள் அதிகரிக்கவும் இனிவரும் கூட்டத்தில் முயற்சிகள் சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டது.

5. இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் அக்டோபர் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும்.

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter