Friday, March 20, 2026

நாளை அனைத்து மருந்து கடைகளும் மூடல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடு முழுவதும் ஆன் லைன் மருந்து விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.

இதனால் தரம் குறைந்த மற்றும் காலாவதியான போலி மருந்து விற்பனை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துகள், மருத்துவரின் பரிந்துரை அல்லது மருந்தகரின் மேற்பார்வையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது மருந்துகள் சட்ட விதியாக உள்ளது.

ஆனால், ஆன் லைன் மூலம் மருந்து விற்பனை செய்யப்படும் போது இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டிய வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

ஆன் லைனில் மருந்து விற்பனை செய்யப்படுவதன் மூலம் கிராமப்புற, சிறு மருந்து கடைகள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இந்த மருந்து கடைகளை நம்பியுள்ள பணியாளர்கள் பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு தனது முடிவினை கைவிட வலியுறுத்தி நாளை (28-09-2018) வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மருந்து கடைகள் மூடப்படுவதாக அகில இந்திய மருந்து வணிகர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன்படி தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நாளை அனைத்து மருந்து கடைகளும் மூடப்படும் என்றும் அரசு மருந்தங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் மற்றும் கிளினிக்குகள் இந்த போராட்டத்தில் பங்கேற்காது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img