74
அதிரையில் எதிர் வரும் (12-10-2018)வெள்ளிக்கிழமை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்கிற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற உள்ளது.
இந்த கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க இருக்கும் நிலையில் இன்று இரவு அதிரையில் உள்ள பெரும்பாலான இடங்களில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
அதில் பி.ஜைனுல் ஆபிதீன் அதிரைக்குள் வர விட கூடாது என்பன வாசகங்கள் அடங்கியுள்ளது மட்டுமின்றி அதிரை தவ்ஹீத் ஜமாஅத் இந்த சுவரொட்டியை தயாரித்தது போன்றும் அதில் அடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.