93
திருச்சிராப்பள்ளி ஊராட்சி திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று(12.10.2018) அதிகாலை 1 மணியளவில் ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற விமானம் துபாய்க்கு புறப்பட்டது. ஓடுதளத்தில் இருந்து மேலே பறக்க முயன்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த சுற்றுச்சுவரில் மோதிவிட்டுச் சென்றது. விமானத்தின் சக்கரங்கள் அவற்றின் மேல் மோதியதில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கப்பட்டது. பின்னர் பயணிகள், மாற்று விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.