Saturday, March 21, 2026

கல்லூரி மாணவி இடைநீக்கம் கேம்பஸ் ஃப்ரண்ட் மாணவர் அமைப்பு கடும் கண்டனம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உறுதியாக நின்று தூக்குமேடை ஏறி தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரன் பகத்சிங். ஆங்கிலேய அந்நிய சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிய பகத்சிங்கின் பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக கோவையில் அரசு கல்லூரியில் கலந்தாய்வு கூட்டம் நடத்திய மாணவர்களில் ஒருவரான மாலதியை அக்கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருப்பது கல்வி வளாக ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலாகவே கேம்பஸ் ஃப்ரண்ட் கருதுகிறது.

இது குறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஸ்தபா விடுதுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் தொடர்ந்து கல்லூரி வளாகங்களில் ஜனயாயக முறையில் போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறைகளும் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படுகிறது.
இத்தகைய செயலை கேம்பஸ் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.

அதுமட்டுமின்றி ஜனநாயகம் வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றான கல்வி வளாகங்களில் இருக்கும் ஜனநாயகத்தை பின்பற்றி சுதந்திரப்போராட்ட வீரரை நினைவு கூறும் வகையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தியதற்காக இடைநீக்கம் செய்வது மாணவர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும்.

கோவை அரசு கல்லூரி நிர்வாகத்தின் இத்தகைய செயலை கேம்பஸ் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிப்பதோடு, மாணவி மாலதியின் இடைநீக்கத்தை திரும்பப்பெற்று மீண்டும் கல்லூரிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img