Home » உயிருக்கு போராடும் அதிரை பெண்மணியின் மருத்துவ செலவிற்கு உதவிடுவீர் !

உயிருக்கு போராடும் அதிரை பெண்மணியின் மருத்துவ செலவிற்கு உதவிடுவீர் !

0 comment

அதிரை ஷிஃபா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வெளியூர் சென்று வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட எதிர்பார்க்காத விபத்தில் மனைவிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனால் திடீரென மருத்துவர் இங்கு பார்க்க முடியாது என கைவிரித்துள்ளார்.

இதையடுத்து அப்பெண் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணிற்கு நுரையீரல், இதயம் மற்றும் தொடையில் ரத்தம் தேங்கியுள்ளதாகவும் அதனை சரி செய்தல் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்பெண்ணிற்கு 8 வயதுள்ள பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

அவருடைய சிகிச்சைக்கு ரூ. 2 லட்சத்திற்கு மேல் ஆகும் என மருத்துவமனை கூறியுள்ளது. ஆனால் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பெண்ணின் சிகிச்சைக்கு நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். வங்கிகணக்கும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

உயிருக்காக போராடும் அப்பெண்ணிற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வங்கிக் கணக்கு விவரம் :

Bank Name : INDIAN BANK
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No : 6051129205
IFSC CODE : IDIBOOOA110

மேலும் தொடர்புக்கு :
9994607085
9688768285

குறிப்பு : மேலுள்ள தகவல் அனைத்தும் அதிரை எக்ஸ்பிரஸால் உறுதி செய்யப்பட்டது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter