48
அதிரையில் எம்.எம்.எஸ் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. செந்தில்குமார், பட்டுக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.ஆர். ரெங்கராஜன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே. மகேந்திரன் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் அங்கு நடைபெற்ற விருந்து உபசரிப்பிலும் கலந்து கொண்டனர்.