56
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது, அதனை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசும், தன்னார்வ அமைப்புகளும்,பொதுமக்களும் சேர்ந்து எடுத்துவருகின்றனர்.
அதனின் தொடர்ச்சியாக அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பாக பொதுமக்கள், கல்லூரி,பள்ளி மாணவர்கள் என பலருக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்கள்.