103
மதத்தால் வேறுபட்டாலும், மானிட பிறவி ஒன்றே என்பது நியதி .
இன மோதல்களை கட்டவிழ்த்து ஆதாயம் தேட நினைக்கும் காவிகளுக்கு மத்தியில் மனிதமே மேலோங்க வேண்டும் என கொள்கையை கொண்ட அமைப்பினர் கஜாவின் கோரப்புயலில் சிக்குண்ட மக்களின் துயர் துடைத்து வருகின்றனர்.
இதில் ஒருபடி மேலே போய் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் உள்ள ஆதிபரா சக்தி கோவிலை சுத்தம் செய்யும் பணியை SDPI மாவட்ட தலைவர்,மற்றும் செயல் வீரர்கள் கொண்ட குழு புனரமைப்பு செய்தனர்.
அங்கு புயலின் கோர பிடியில் கோவில் மரங்கள் முறிந்தது.
கிட்டத்தட்ட ஒருவார காலமாகியும் யாரும் அதனை சுத்தம் செய்யாததால் களத்தில் குதித்தனர் SDPIயின் களப்பணியாளர்கள்.
முழுவதுமாக அகற்றப்பட்ட அக்கோவிலின் பகுதிகள் மக்களின் தரிசனத்திற்க்காக தயாராக உள்ளன.