Home » முத்துப்பேட்டையில் தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு !

முத்துப்பேட்டையில் தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு !

0 comment

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று திங்கள்கிழமை தொழிலதிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.

முத்துப்பேட்டை டி.டி.பி சாலையில்
M.M.A டிரடேர்ஸ், M.M.A பில்டர்ஸ்,
M.M.A லாட்ஜ் ஆகிவற்றின் உரிமையாளர் திரு.ஜாலாலுதீன் ஆவார். நேற்று M.M.A லாட்ஜில் வாடகைக்கு முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த பிரசாந்த் த/பெ குமார் மற்றும் வசந்த் ஆகிய இருவரும் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் ரூம் காலி பண்ண வேண்டிய நேரம் வந்ததும் ரூம்மை காலிபண்ண மறுத்தும்,வாடகை கொடுக்காமலும் வாக்குவதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு மட்டுமின்றி வீட்டுக்கு திரும்பி வந்துவிட்ட M.M.A லாட்ஜ் உரிமையாளர் ஜலாலுதீனை கொலை முயற்சி நோக்கில் முழு போதையுடன் அரிவாளுடன் வீட்டுக்குவந்து தகராறு செய்து வெட்டி காயப்படுத்தி, மிரட்டல் மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலையில் வெட்டுப்பட்டவுடன் கூக்குரலிட்ட ஜலாலுதீன் குரல்கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடியவுடன் குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர்.
அருகிலுள்ளவர்கள் குற்றவாளிகள் இருவரையும் மடக்கி பிடித்து
முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

வெட்டுகாயத்துடன் உயிர்தப்பிய ஜலாலுதீனுக்கு முதலுதவி சிகிச்சை முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஓட்டல் உரிமையாளர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டிருப்பது முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter