243
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்,மல்லிப்பட்டிணத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கஜா புயலால் தாக்கப்பட்டது. அப்பொழுது அதிரை,மல்லிப்பட்டிணம் மற்றும் அதனை சுற்றி உள்ள வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சாலைகளில் விழுந்து கிடந்தன.
இந்நிலையில் சில இடங்களில் இதை அப்புறப்படுத்தி விட்டனர். இன்னும் சில இடங்களில் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது.
தற்சமயம் மழைக்காலம் என்பதால் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தகரங்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
எனவே இது போல் அப்புறப்படுத்தப்படாமல் இருக்கும் தகரங்களை அந்தந்த வீட்டு,நிர்வாக பொறுப்பாளர்களே அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொள்ள படுகிறது.