Thursday, February 5, 2026

பள்ளிக்குள் பசு, பள்ளிக்கு வெளியே மாணவர்கள் வினோத ஆட்சி புரியும் பாஜக….!

spot_imgspot_imgspot_imgspot_img

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் பசுமாடுகள் கட்டி வைக்கப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் பசுக்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். உயர் மட்ட அதிகா ரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பசுக்களை உரிய முறையில் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். வழி தவறிய பசுக்களை பாதுகாக்க கமிட்டி அமைக்குமாறு தலைமைச் செயலாளருக்கும் அறிவுரை வழங்கிய செய்தி சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், தெருக்களில் சுற்றித்திரியும் பசுக்களை சிலர் வதைப்பதால் விவசாயிகள் பள்ளி, அரசு மருத்துவமனைகளில் கட்டி வைத்து வரு கின்றனர். அந்த வகையில், பண்டா என்ற பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இதைக் கண்ட பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்லாமல் வெளியேறினர். இதற்கிடையே கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மாடுகளை கட்டி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img