65
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சார்பில் வருகிற 27ஆம் தேதி மாநில அளவிலான திருக்குர்ஆன் மாநாடு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநில அளவிலான மாநாட்டில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் லட்சக்கணக்கில் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் இஸ்லாமியர்களின் புனித நூல்(வேதம்) திருக்குர்ஆனின் மாண்புகள் குறித்தும், சிறப்புகள் குறித்தும் பல்வேறு பேச்சாளர்கள் பல தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.
இந்த மாநாட்டில் பொதுமக்கள் கலந்துகொண்டு திருக்குர்ஆனின் மாண்புகள் குறித்தும், பொதுவான சந்தீகங்களை விளங்கிக்கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளனர்.