Saturday, March 21, 2026

மல்லிப்பட்டிணத்தில் சாலையை ஆக்கிரமித்த குப்பைகள்,வழியை ஏற்படுத்துமா ஊராட்சி நிர்வாகம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் பேருந்து நிலையம் பின்புறம் பெண்கள் பயன்படுத்தக்கூடிய சாலை உள்ளது. அச்சாலை பெண்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாகவும் உள்ளது.

இந்நிலையில் அந்த சாலை முழுவதும் குப்பைகள், கழிவுகள், காய்கறி கழிவுகள்,பிளாஸ்டிக் கழிவுகள் போடப்பட்டுள்ளன. சாலை முழுவதும் பரவி கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளால் அந்த சாலையே காணாமல் போய்விட்டது.

குப்பென வீசும் துர்நாற்றத்தால் அந்த சாலை வழியே பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.மேலும் இப்பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருவதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பள்ளி மாணவிகளும் இச்சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே இவ்விஷயத்தில் மல்லிப்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img