Friday, October 11, 2024

நியூசிலாந்தில் மசூதியில் தொழுதுக்கொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது பயங்கர தாக்குதல் !

spot_imgspot_imgspot_imgspot_img

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவன், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர்.

தாக்குதல் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆயுதப்படை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டான். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் அருகில் உள்ள மற்றொரு மசூதியிலும் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தினான். இரண்டு இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் 49 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் தெரிவித்துள்ளார். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து நகரின் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாகவும், நியூசிலாந்து நாட்டின் கருப்பு தினம் இன்று என்றும் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...

ஜப்பானில் இஃப்தார் நிகழ்ச்சி..! திரளான அதிரையர்கள் பங்கேற்பு…!!

புனிதமிகு ரமலான் மாதத்தில் ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று(07-04-24) ஞாயிற்றுக்கிழமை...

ஜப்பானில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி! 100க்கு மேற்பட்டோர் பங்கேற்பு!

ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை ...
spot_imgspot_imgspot_imgspot_img