154
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான சேது சாலையின் பக்க வாட்டில் குப்பைகளை அப்பகுதி வாழ் மக்கள் கொட்டி வருகின்றனர்.
எப்பவாவது ஒரு முறை மட்டுமே பேரூர் நிர்வாகத்தால் அள்ளப்படும் குப்பைகளால் நாள் தோறும் தேங்கி கிடக்கும் குப்பைகளின் துர்நாற்றம் அப்பகுதி வாழ் மக்களை பாதிக்கிறது.
இந்நிலையில் இதனை பொருத்து கொள்ளாத சில விசமிகள் குப்பை மேட்டில் தீவைத்து செல்கின்றனர்.
அந்த வகையில் இன்று வைக்கப்பட்ட தீ மளமளவென எரிந்து பெருந்தீயாக உருவானது.
இதனை அடுத்து உஷாரான முத்தமால் தெரு சமூக சங்கத்தின் இளைஞர்கள் ஒன்றினைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அடிக்கடி ஏற்படும் இத்தீவிபத்தால் அப்பகுதியில் வாழும் குடிசை வாழ் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வீடியோ இணைப்பு:-