Home » தண்ணீர் இல்லை என்று கவலை வேண்டாம் பள்ளப்பட்டி இளம் விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு !!(வீடியோ இணைப்பு)

தண்ணீர் இல்லை என்று கவலை வேண்டாம் பள்ளப்பட்டி இளம் விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு !!(வீடியோ இணைப்பு)

0 comment

 

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டீசலுக்கு மாற்றான பைரோ ஆயில் கண்டுபிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த காஜா அவர்களின் மற்றுமொரு புதிய
படைப்பு PULSE JET NOZZLE

ஆழ் துளை கிணறுகளின் அடிப்பகுதியில் AIR PIPE, WATER PIPE களுடன் இணைக்கப்படும் சாதாரண ஜெட் பைப்புக்குப் பதிலாக அதை விட கூடுதல் பலன் தரக்கூடிய பல்ஸ் ஜெட் பைப் கண்டுபிடித்து பெருமை சேர்த்துள்ளார். அது பயன்பாட்டுக்கு வந்து வெற்றியும் பெற்றுள்ளது.

மோட்டார் கம்ப்ரசர் போடும் போது காற்றும் தண்ணீரும் கலந்து வரும். போர் குழாய்களில் ஓரளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே Compressor, நீரை மேலே தள்ளும்.ஆனால் காஜா அவர்களின் கண்டுபிடிப்பான பல்ஸ் ஜெட் பைப் உபயோகித்தால் குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலும் தொடர்ந்து போர் நீர் வந்து கொண்டே இருக்கும். கம்பரஸ்ஸிங் ஏர் மட்டும் அதிகம் வராமல் தண்ணீர் அதிகம் வருவதும் இதன் கூடுதல் சிறப்பு.

900 அடி BORE WELL ல் இந்த புதிய பைப் பொருத்தப்பட்டு இதன் வித்தியாசத்தை உணர்ந்த விவசாயி ஒருவரின் பேட்டியும் தண்ணீர் வரும் விடியோவும்இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகங்களுக்கு

PES CEO காஜா மொய்னுதீன்

90877 61149

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter