தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அதிரை தரகர் தெரு இஸ்லாமிய நற்பணிமன்ற இளைஞர்கள் சுமார் 20 பேர் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள குப்பைகளையும் , கொசு பரவ காரணமாக இருக்கும் சாக்கடைகளையும் சரிசெய்துவருகின்றனர்.
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான தரகர் தெருவில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். ஆனால் தற்பொழுது வரை அதிரை பேரூராட்சி சார்பில் அப்பகுதியில் குப்பைகள் அல்லப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாற்றினார்.
தற்பொழுது பரவி வரும் டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் வகையில் பேரூராட்சி நடவடிக்கை எடுக்காவிட்டால் பேரூராட்சியை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்பகுதியினர் கூறினார்கள்.