தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தரகர் தெரு இஸ்லாமிய நற்பணிமன்றம் இளைஞர்கள் சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதிரை தரகர் தெருவில் எந்த விதமான டெங்கு விழிப்புணர்வும் மற்றும் குப்பைகள் அல்லப்படவில்லை.
இதையடுத்து, அப்பகுதி இளைஞர்களாக இணைந்து நேற்று அப்பகுதியை குப்பைகளை அகற்ற முன்வந்து டெங்கு காய்ச்சலை தடுக்க ஆரம்ப கட்ட வேலையை ஆரபித்தனர்.
இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட முயற்சியாக இன்று அப்பகுதியில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்தனர். இதனை அந்த தெருவாசிகள் மட்டும்மின்றி பலர் பயன்படுத்திக்கொண்டு நிலவேம்பு கசாயம் அருந்தினார்.