அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகே உள்ள கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இத் தொடரில் பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று விளையாடி வந்த நிலையில், இத் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இன்றைய தினம் இறுதிப் போட்டியில் ‘கலைவாணர் 7’s கண்டனூர் – 5Sky Sporting காயல்பட்டினம்’ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
சம பலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் கடந்த காலங்களில் பல்வேறு தொடர்களில் அதிகமான வெற்றிகளையே பெற்றிருக்கின்றனர்.
16 வருடமாக நடைபெற்று வரும் இந்த AFFA தொடரில் நேதாஜி FC தஞ்சாவூர், கண்டனூர் ஆகிய அணிகள் தலா 3 முறையும், VVFC மனச்சை 2 முறையும், தென்னரசு பள்ளத்தூர், கரம்பயம், அதிரை SSMG, அதிரை AFFA ஆகிய அணிகள் தலா ஒரு முறை வெற்றிக் கோப்பையை உச்சி முகர்ந்திருக்கிறது.
கடந்த ஆண்டு தொடரில், பலம் வாய்ந்த ‘பக்கர்’ தலைமையிலான கௌதியா 7’s நாகூர் அணியை, ‘ஜூட்ஸன்’ தலைமையிலான தூத்தூர் கன்னியாகுமரி அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறது.
AFFA தொடரில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற கண்டனூர் அணி நான்காவது முறையாக சாம்பியனாக துடித்துக் கொண்டுருக்கும் வேலையில், காயல்பட்டினம் அணியின் நம்பிக்கை தூணாக இருக்கும் வீரர் ‘பஷீர்’ அவர்களின் அணுகுமுறைகள், ஆட்ட நுணுக்கங்கள் கண்டனூர் அணிக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை.
கண்டனூர் அணியை பொருத்தவரை, ‘வில்லியம்ஸ்’ மிகப் பெரும் பொக்கிஷமாக வலம் வந்து கொண்டிருந்தாலும், அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அணியின் கோல் கீப்பர் ‘மணி’ இருப்பது கண்டனூர் அணிக்கு கூடுதல் பலமாகவே இருக்கிறது.
கண்டனூர் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமிருந்தாலும் அதை தவிடுபொடியாக்கி காயல்பட்டினம் அணி முதல் முறையாக AFFA வெற்றிக் கோப்பையை உச்சிமுகரும் என்பது அதிரை கால்பந்து ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
சாம்பியனாக இரு அணிகளும் துடிப்பதால் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த இறுதிப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும் எனலாம்.
ஆக்கம்,
அதிரை.