மரண அறிவிப்பு : கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் மஸ்தான் கனி அவர்களின் பேரனும், மர்ஹும் பக்கீர் முகம்மது அவர்களின் மகனும், வாத்திவீட்டு முகமது புஹாரி அவர்களின் மருமகனும், இபுராஹிம், எ.தாஜூதீன் ஆகியோரின் மைத்துனரும், ஜாஹிர் உசேன், முகம்மது மரைக்கான் ஆகியோரின் சகோதரரும், யாசர் அரபாத் அவர்களின் தகப்பனாருமாகிய அப்பாம்பி என்கிற அகமது ஜலாலுதீன் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.