105
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தலைநகர் சென்னை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதேபோல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது குறிப்பிடத்தக்கது.