Sunday, February 1, 2026

அதிரை WFC தொடர்: காரைக்குடியிடம் போராடி வீழ்ந்த நாகூர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பாக 9 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய கருத்தம்மா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு இத்தொடர் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இன்றைய தினம்17 வது போட்டியில் கௌதியா 7’s நாகூர் – SSNFC காரைக்குடி அணிகள் களம் கண்டன.

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் முதல் கோல் அடிப்பதற்க்கு முன்னேறிய போதும் மிக எளிதாக நாகூர் அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.

இருப்பினும் சற்றும் சளைக்காமல் விளையாடிய காரைக்குடி அணி முதல் தனது கோலை அடித்து நாகூர் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.

முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்கிற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.

பின்னர் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் காரைக்குடி அணி தனது இரண்டாவது கோலை அடித்து முன்னிலை பெற்றது.

சீரான இடைவெளிகளில் நாகூர் அணிக்கு கோல் அடிப்பதற்கு பல வாய்ப்புகள் கிடைத்தும் அதனை நாகூர் அணி வீண் செய்தது.

இறுதியில் காரைக்குடி அணி 2-1 என்கிற கோல் கணக்கில் நாகூர் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

நாளைய தினம் Balu & Kanakaraj திருச்சி – காரைக்குடி அணிகள் மோத உள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img