தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் இரவு நேரங்களில் மாடுகள், நாய்கள் போன்ற உயிரினங்களின் அட்டூழியத்தால் சாலை விபத்துகள் நேர்கின்றது.
பொதுவாக இரவு நேரங்களில் சாலைகளில் அதிகமான உயிரினங்கள் அமர்ந்திருப்பதாலும், குறுக்கே ஒடுவதாலும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றது. மேலும் இதனால் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகிறது.
நேற்று இரவு ஈசிஆர் ரோடு கமால் மில் அருகில் அதிகமான மாடுகள் சாலையில் அமர்ந்திருந்தபடி திடீரென எழுந்து ஓடியதால் அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து நேர்ந்துள்ளது.
எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
வீடியோ :