92
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர பகுதியான கிருஷ்ணாஜிபட்டினத்தில் கனமழையால், கண்மாய்கள் நிரம்பி வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பொதுமக்களின் வீடுகளில் வெள்ளநீர் நுழைந்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் சுமார் 500 பேர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு, புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் உள்ள மக்களை நேரில் பார்வையிட்ட அரசு அதிகாரிகள், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.