Home » சட்டமாகும் குடியுரிமை மசோதா… அகதிகளாக்கப்படும் முஸ்லிம்கள் ?

சட்டமாகும் குடியுரிமை மசோதா… அகதிகளாக்கப்படும் முஸ்லிம்கள் ?

0 comment

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன.இதனால் லோக்சபாவில் எளிதாக சட்ட மசோதா நிறைவேறியது.

இந்த நிலையில் நேற்று ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில், மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் ராஜ்யசபாவிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

இந்த மசோதா இரண்டு அவையிலும் நிறைவேறிவிட்டது. இதனால் இனி இது சட்டமாகும். இன்னும் இரண்டு நாட்களில் இந்த மசோதா குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பின் ஒரு வாரத்திற்குள் இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார். பின் இது முழுக்க முழுக்க சட்டமாகும்.

இது சட்டமான உடனே உள்துறை அமைச்சகம் இதில் தீவிரமாக செயலாற்ற துவங்கும். ஆம் இதற்காக தனி குழுவை உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைப்பார் என்று கூறுகிறார்கள். இவர்கள் இரண்டு விதமான பணிகளை செய்வார்கள். இந்தியாவில் இருக்கும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் குறித்து ஆய்வு செய்வார்கள்.

அதாவது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் குறித்து இவர்கள் கணக்கெடுப்பார்கள். எப்படியும் இந்த கணக்கெடுப்பு 1 வருடம் நடக்கும் என்று கணிக்கப்படுகிறது.

தற்போதைய அறிக்கைகளின் படி இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் 35000 பேர் இந்த 3 நாடுகளில் இருந்து குடியேறி உள்ளனர். இவர்களுக்கு அடுத்த வருடம் இறுதிக்குள் கண்டிப்பாக குடியுரிமை வழங்கப்படும்.

இன்னொரு பக்கம் இதே குழு வேறு ஒரு முக்கியமான பணிகளை செய்யும். அதன்பின் இந்தியாவில் தகுந்த ஆவணங்கள் இன்றி குடியேறிய இஸ்லாமியர்கள் குறித்து கணக்கு எடுக்கப்படும்.

அதாவது சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் ஆவணங்கள் இன்றி குடியேறிய எல்லோரின் லிஸ்ட்டும் எடுக்கப்படும். அதாவது இந்திய முஸ்லீம் அல்லாத எல்லோரின் லிஸ்டும் எடுக்கப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்படும்.அதன்பின் இவர்கள் மீது இரண்டு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஒன்று இவர்கள் மீண்டும் அவர்களின் பழைய நாட்டிற்கே செல்ல வேண்டும். அல்லது இவர்கள் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு உள்ளேயே அகதிகள் முகாமில் அடைக்கப்படுவார்கள்.

பெரும்பாலும் இவர்கள் அகதிகள் முகாமில் அடைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வங்கதேச முஸ்லீம்கள், பீகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தானின் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம்கள், குஜராத்தில் உள்ள சில ஆப்கானிஸ்தான் முஸ்லீம்கள், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் பாதிக்கப்படுவார்கள்.

நேற்று பேசிய அமித் ஷா, இவர்கள் அகதிகள் முகாமில் அடைக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார். அதனால் இவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. அப்படி பல லட்சம் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் உலக அரங்கில் இந்தியா பெரிய பாதிப்பை சந்திக்கும். இது தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter