Home » திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவைகளை முழுவீச்சில் துவக்க வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவைகளை முழுவீச்சில் துவக்க வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

by
0 comment

திருவாரூர் -காரைக்குடி ரயில் மார்க்கம் பாரம்பரியமிக்க தொன்மை வாய்ந்தது. மீட்டர்கேஜ் காலத்தில் மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி வரை பலதரப்பட்ட பயணிகளும் குறிப்பாக வணிகர்கள், அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரி மாணவர்கள், போன்றோர் அதிகம் பயன்படுத்தினர். அகலப்பாதை பணி களுக்காக 2006 ஆம் ஆண்டு சேவை நிறுத்தப்பட்டது. பல கட்ட போராட்டத்திற்கு பிறகு 2019 ஜூன் மாதம் முதல் தினமும் ஒரு டெமு ரயில் இயங்குகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி,  முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய ஊர்களில் உள்ள இரயில் ஆர்வலர்கள் அகலப்பாதை கூட்டமைப்புத் ஒன்றினை துவங்கி அதன் வழியாக திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் அதிகமான சேவைகளை துவக்க வேண்டும்; சரக்கு போக்குவரத்து சேவைகளை துவக்க வேண்டும் என பலகட்ட போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இரயில் இயக்கப்படா மைக்கு முக்கிய காரணம் தென்னக இரயில்வே இந்த தடத்தில் உள்ள இரயில்வே கேட்டுகளுக்கு பணியாளர்களை  போதுமான அளவிற்கு நியமிக்காமைதான். இந்நிலையில் இன்று 17-1-2020 திருவாரூரில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம். செல்வராஜ் அவர்களை திருவாரூர்- காரைக்குடி அகல இரயில் பாதை உபயோகிப்போர்  சங்க கூட்டமைப்பினர் அதன் தலைவர் திரு என்.ஜெயராமன், செயலர் வ.விவேகானந்தம் திருவாரூர் தணிகாசலம், பேராசிரியர் ப. பாஸ்கரன், பாரதி, அக்பர் பாஷா, இலியாஸ் முத்துப்பேட்டை சாஜத், சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா,) அதிராம்பட்டினம் ஏ.அப்துல்ரசாக், எஸ்.ஏ.அப்துல்ஜலில், நஜ்மூதீன், ஜித்தா.ரஃபியா பட்டுக்கோட்டை எம்.கலியபெருமாள் கா.லட்சுமிகாந்தன் ஆகியோர் சந்தித்து இந்த மார்க்கத்தில் சேவை துவங்க உதவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நாகை எம்பி திரு.எம்.செல்வராஜ் கூறுகையில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ராமநாதபுரம் எம்பி, திரு. நவாஸ் கனி, சிவகங்கை எம்பி திரு. கார்த்தி சிதம்பரம் ஆகியோருடன் இணைந்து சென்று தென்னக இரயில்வே அதிகாரிகளை வரும் 28- 01- 2020 அன்று சந்தித்து ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளாரஏறக்குறைய ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து சரக்கு ரயில்களும் பயணிகள் இரயில்களும் இயக்கப்படாமல் உள்ளது வேதனை அளிப்பதாக இருக்கிறது என்றார்.

 திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்போர் சங்கத்தலைவர் தணிகாசலம், “தென்னக ரயில்வே இது விஷயத்தில் பொதுமக்கள், வர்த்தகர்கள், மாணாக்கர்கள், நலனை   பிரதானமாக கருதி உடனடியாக சேவை துவங்க வேண்டும்.  அப்படி சேவை துவங்கவில்லை எனில் இப்பகுதி மக்கள் கடுமையான போராட்டத்தை மேற்கொள்ள தயாராக உள்ளனர் “என்றார்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter