இந்தியா முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிரையிலும் பல்வேறு இடங்களில் நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிரை பழஞ்செட்டித் தெருவில் உள்ள AJ ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் தேசிய கொடியேற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஹாஜி பேராசிரியர் S.பர்கத், ஹஜ்ரத் தேங்கை சரபுதீன் ஆகியோர் குடியரசு தின உரை நிகழ்த்தினர்.
இவ்விழாவில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.