ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரி கோட்டை ரோட்டரி சங்கம் பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கம் ஆகியவை இணைந்து ஏனாதி ராஜப்பா கல்லூரியில் 22. 2 .2020 சனிக்கிழமை காலை இரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கினை நடத்தினர் .
நிகழ்ச்சிக்கு கோட்டை ரோட்டரி சங்க தலைவர் எம்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் முன்னிலை வகித்தார் .
ரோட்டராக்ட் சங்க தலைவரஜே.பிரசன்ன வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார்.
தட்சிண இரயில்வே யூனியன் துணை பொதுச்செயலாளர்டி. மனோகரன் ரயில்வே நிர்வாக அமைப்புகள் அதில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும் ,வேலைக்கு விண்ணப்பிக்கும் முறைகள் பற்றியும் கலந்துரையாடல் மூலம் விளக்கமளித்தார்.
கருத்தரங்கில் சுமார் 250 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட துணை ஆளுநர் ஞா.ஜெயசீலன் பேராசிரியர் எஸ் பி எஸ் ராஜா ,
பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் துணைத்தலைவர் கா.லெட்சுமி காந்தன் ஒருங்கிணைப்பாளர் எம் கலியபெருமாள், சங்கர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர் ரெஜினால்ட் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் முடிவில் பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் வ.விவேகானந்தம் நன்றியுரை ஆற்றினார்.

