மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம், சங்க வளாகத்தில் (11-03-2020) வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் தேர்வினை J. முகமது புஹாரி, K.ராஜிக் முகமது, S.நிஜாமுதீன் ஆகியோர் நடத்தினர். இக்கூட்டத்தில், மெஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய தலைவராக P.M.K. தாஜுதீன், துணைத்தலைவராக M.M.S.முகமது இக்பால், செயலாளர்களாக P.ஜமாலுதீன், M.காதர் முகைதீன், துணைச் செயலாளராக N.சம்சுல் மன்சூர், பொருளாளர்களாக K. தாஜுதீன் (எ) சலீம், S. பகுருதீன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், ஆலோசனை குழு உறுப்பினர்களாக ம.செ ஜபருல்லா, K.நஜ்முதீன், M.I. அஸ்ரப், K.முகமது அப்துல்லா, A.சகாபுதீன், V.T.அஜ்மல்கான், M.M.S.அன்வர், J.முகமது புஹாரி, A.சிக்கந்தர், S.நிஜாமுதீன் ஆகிய 10 பேர் கொண்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.