83
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் ஷாஹின் பாக் தொடர் போராட்டம் 40 இடங்களில் நடைபெற்று வந்தது.
அந்தவகையில் அதிராம்பட்டினத்தில் ஷாஹின் பாக் 27 வது நாட்களாக நடைபெற்ற வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக 31 வரை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிரை இளைஞர்கள் அமைப்பு சார்பில் CAA, NRC, NPR சட்டங்களை கண்டித்து இன்று (18-03-2020) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி அருகில் போராட்டம் நடைபெற உள்ளதாக இளைஞர்கள் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மேலும் இப்போராட்டத்தில் அதிரை வாசிகள் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலத்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.