68
தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று(20.3.20) மாலை 4:30 மணியளவில் நகரத்தலைவர் அப்துல் பஹத் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை பணிகள் என அனைத்து குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேனர்,நோட்டீஸ் போன்றவற்றை வினியோகிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் அஸ்கர்,மருத்துவர் ஜியாவூர் ரஹ்மான் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்துக்கொண்னர்.