Home » அதிரையில் கொரோனா என பரவும் செய்தி – உண்மை என்ன ?(நேரடி ரிப்போர்ட்)

அதிரையில் கொரோனா என பரவும் செய்தி – உண்மை என்ன ?(நேரடி ரிப்போர்ட்)

0 comment

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அதிரையில் உள்ள யாரும் வீடுகளைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் வாட்ஸ்அப்பில் ஆடியோ பதிவு ஒன்று வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து நமது அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்று தலைமை மருத்துவரிடம் விசாரித்தோம்.

அப்போது அவர் கூறியதாவது :

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தம்பதியர், உம்ரா செய்வதற்காக சவூதி அரேபியா சென்று கொச்சி வழியாக அதிரைக்கு திரும்பியுள்ளனர்.

அவ்வாறு திரும்பிய அந்த நபருக்கு, இருமல் பிரச்சினை இருந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக உடனே அவர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்ததில், அவருக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை.

அவர் நீரிழிவு நோயாளி என்பதால் அவருக்கு பல நாட்களாகவே இருமல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறைக்கும் அதிரை அரசு மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு சென்று வந்த அவருக்கு காய்ச்சலோ, மற்ற அறிகுறிகளோ எதுவுமே இல்லை. இருந்தும் அவர் வெளிநாடு சென்று வந்தவர் என்பதால், அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலேயே தங்கி இருக்குமாறும், வெளியே எங்கும் 14 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர் அனைவரும், 14 நாட்கள் வெளியே எங்கும் செல்லாமல் கட்டாயம் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்ததல் மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெளிநாடு சென்று வந்தவர்கள், ஏதாவது அறிகுறிகள் இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொடுள்ளனர்.

மக்களாகிய நாமும் அரசிற்கும், மருத்துவர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter