அதிராம்பட்டினம் பெரிய ஜுமுஆ பள்ளி அருகே தனியார் நிறுவனம் சார்பில் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டபட்டபோது, பேரூராட்சியின் ராட்சத குடிநீர் குழாய் உடைப்புக்குள்ளானது.
இதனால் நேற்று கடற்கரைத்தெரு, ஹாஜா நகர், புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒருநாள் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.
ராட்சத குழாய் உடைந்த நிலையில், அதனை உடனடியாக சரிசெய்யும் பணியில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் களத்தில் இறங்கியது.
பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி நேற்று இரவுக்குள் உடைந்த குழாயை சரி செய்தனர். இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோரின் சோதனைகளுக்கு பிறகு மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
கோடை காலத்தில் மக்களின் தேவை கருதி, விரைவாக சரிசெய்த பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர் அன்பரசன் மற்றும் பேரூராட்சி ஊழியர்களுக்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகத்தினர் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.


