நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA, கொரோனா தொற்று தொடர்பாக நடைப்பெற்று வரும் முன் எச்சரிக்கை சிகிச்சை முறைகளை மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.காதர் மற்றும் செவிலியர்களையும் சந்தித்து பேசினார். தற்போது நடைப்பெற்று வரும் சேவைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் மக்களால் கொண்டாடப்படுவதாக கூறினார்.
கொரோனா தொற்று தொடர்பாக இதுவரை இங்கு 23 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொரோனா இல்லாதலால் அவர்கள் உரிய சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிவிட்டதாக டாக்டர் காதர் கூறினார்.
இங்கு 130 படுக்கைகள் கொண்ட சிறப்பு ஏற்பாடுகள் கொரோனா தொடர்பாக செய்யப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டார்.
பிறகு சித்தா மருத்துவ பிரிவுக்கு சென்றவர் அங்கு வழங்கப்படும் சுபகர குடிநீரை அருந்தினார். தினமும் காலையில் நூற்றுக்கணக்கானோர் இதை பருகுவதாகவும் டாக்டர்கள் கூறினர்.
இதுகுறித்து சித்தா வைத்தியர்களை அழைத்து பேச வேண்டும் என தான் சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசியதை அவர்களிடம் தமிமுன் அன்சாரி MLA கூறினார்.
பிறகு மருத்துவமனையில் துணிகள் யாவும் கிருமி மருந்துகள் கலந்து துவைக்கப்படுவதையும் பார்த்து உறுதி செய்தார். உணவுகள் யாவும் கவனமான முறையில் தயாரிக்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்.
இரவு பவலாக சேவையாற்றும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் தான் பாராட்டுவதாக கூறி, எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை தொடர்புக் கொள்ளுமாறும், ஊரடங்கு உத்தரவு இருந்தாலும் MLA அலுவலகம் காலை 10 முதல் 1 மணி வரை அவசர சேவைக்காக திறந்திருக்கிறது என்றும் கூறி விட்டு விடை பெற்றார்.
முன்னதாக கொரோனோ விழிப்புணர்வு சம்பந்தமாக MLA அலுவலகம் சார்பாக அடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை மூன்றாம் கட்டமாக டாக்டர் காதரிடம் ஒப்படைத்தார்.





